மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முழுசா சந்திரமுகியாய் மாறிய கங்கனா ரனாவத்.. வைரலாகும் வீடியோ.!
சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழில் கடந்த 25 ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இதில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பிரபு, வடிவேலு, நாசர், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க, ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் வடிவேலு, ராதிகா, லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் இடம்பெற்றுள்ள 'ஸ்வகதாஞ்சலி' எனத் தொடங்கும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.