அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் சண்டை; பரபரப்பான சைதாப்பேட்டை நீதிமன்றம்.!
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம், ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது. இங்கு பல முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுக்காக வந்திருந்த இருதரப்புக்கும், அவர்களின் ஆதரவு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
இந்த சம்பவத்தில் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் மற்றும் புகார் மனுதாரரர்கள் சண்டையிட்டுக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதையும் படிங்க: 11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை வெளுக்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தகவல் அறிந்த கோட்டூர்புரம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு விவகாரத்தில் தொடர்புடையவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அங்கிருந்த கார் ஒன்றின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் எமனாக வந்த மெசேஜ்; மார்பிங் போட்டோவால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!