அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
நண்பனின் மனைவியை அபகரிக்க நினைத்த தோழன்.. வேலை வாங்கிக்கொடுப்பதாக பச்சை துரோகம்.!
தோள்கொடுப்பான் தோழன் என்ற விஷயம் அனைத்து இடத்திலும் சரியாக அமையாது. பெண்களை போகப்பொருளாக பார்க்கும் இதே உலகில் நாம் சுதாரிப்புடன் இருக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் உள்ள வடமதுரை, பி.ஜி புதூர் பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இருவரும் வேலை இல்லாமல் இருந்ததாக தெரியவருகிறது.
நண்பனின் மீது நம்பிக்கை
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கணவரின் நண்பர் தரண் (வயது 19) எனப்வரிடம் வேலை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அவர் இருவரையும் கோபிச்செட்டிபாளையத்திற்கு வரச்சொல்லியுள்ளார்.
இதையும் படிங்க: 15 வயது மகளை 8 மாத கர்ப்பமாக்கிய தந்தை; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.!
அங்கு நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித்தருகிறேன் என நண்பனின் மனைவியை தன்னுடன் அழைத்துசென்றவர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
துரோகம் செய்யத்துணிந்த நட்பு
இதுகுறித்து வெளியேற கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டவே, வீட்டிற்கு சென்ற பெண்மணி கணவரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞர் தரணை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நட்பை உயர்வாக போற்றிலுள்ள வள்ளுவர் தான், அதே நட்பை மற்றொரு இடத்தில் தூற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: இரண்டு பேருந்துக்கு நடுவே சிக்கி இளைஞர் பரிதாப பலி; போதை ஓட்டுனரால் நடந்த சோகம்.. கோவையில் துயரம்.!