மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப்பாக கூல் சுரேஷ் செய்த பரபரப்பு காரியம்.! பின் நடந்தது என்ன? வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து அனன்யா பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, ஐஷூ, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
போட்டியாளரான பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். தொடர்ந்து அனன்யா மற்றும் விஜய் வருமா மீண்டும் வைல்ட் கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். கடந்த சில வாரமாகவே நிகழ்ச்சி பல்வேறு பிரச்சனைகளுடன் அனல் பறக்க சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் மணி அல்லது நிக்சன் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
#CoolSuresh try to escape .this week no elimination cool suresh self eviction. pic.twitter.com/hZqh8RDuwP
— Jin (@Jin49486319) December 13, 2023
இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு,கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன்,அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கூல் சுரேஷ் சுவரில் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் ஏற முடியாததால் மணியின் உதவியுடன் மீண்டும் கீழே இறங்கியுள்ளார். பின்னர் பிக்பாஸ் கூல் சுரேஷை கன்பெஷன் ரூமிற்குள் அழைத்து அவரை கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.
#Biggboss To #Coolsuresh - Porumaiya Irunga#BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7Tamil #BiggBossSeason7 #BBTamilSeason7 #BiggBoss7 #BiggBosspic.twitter.com/z9NPoFLh0g
— Bigg Boss Tamil (@letsentertainz) December 13, 2023