மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முருகதாஸ் கைதா இல்லையா? என்னதான் சொல்கிறது நீதிமன்றம்?
சர்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. விஜய் புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் படங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி அன்று வெளியான சர்க்கார் படம் ஆளும் கட்சியை மிகவும் விமர்சிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
மேலும் நேற்று இரவு முருகதாஸ் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது வதந்தி என்றும், நாங்கள் ரோந்து பணிக்காகத்தான் சென்றோம் என்றும் காவல் துறை விளக்கம் அளித்தது.
இந்நிலையில் தனது தனது வழக்கறிஞர்கள் கூட்டத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் வந்த அவர், தன்னை போலிஸார் எந்த நேரமும் கைதுசெய்யக்கூடும் என்பதால் தனக்கு முன் ஜாமின் வழங்கவேண்டும் என்றும் அதை அவசர வழக்காக விசாரிக்கும்படியும் மனு தாக்கல் செய்தார்.
தற்போது இப்பட விவகாரத்தில் இயக்குனர் முருகதாஸை நவம்பர் 27 ம் தேதி வரை கைது செய்யும் நடவடிக்கை விசயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.