"அம்பேத்கர் போல ஏழைகளின் நீதிக்காக பாடுபடுவதே எனது விருப்பம்" - பா.ரஞ்சித்தின் உறவினர் சிறுமி வைராக்கிய பேட்டி..!!



dhammam-movie-child-actress-speech

கர்ணன் படத்தில் காட்டுப்பேச்சியாக வளம் வந்த பூர்வதாரணி இயக்குனர் பா.ரஞ்சித்தின் "தம்மம்" படத்தில் தைரிய ராணியாக நடித்து இருக்கிறார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் உறவினரான அவர் சென்னை ஆவடி அருகே உள்ள கர்லபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

அவரிடம் தனியார் தொலைக்காட்சியில் இருந்து நேர்காணல் எடுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "எனக்கு நடிக்க வேண்டும் என்று ஆசை இல்லை. திருவிழாக்களுக்கு அடிக்கடி செல்வோம். அங்கு பல கலை நிகழ்ச்சிகள் செய்துள்ளேன். அந்த சமயத்தில் ஒரு அக்கா என்னை பார்த்து நன்றாக நடிக்கிறாய் குறும்படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டார்.

Dhammam movie

நானும் ஜாலியாக ஒப்புக்கொண்டேன். அதனை எனது பெரியப்பா ரஞ்சித்தும் பார்த்திருந்தார். நான் நடித்தது அவருக்கு தெரியாது. அவருக்கு விஷயம் தெரிந்ததும் என்னை அழைத்து பாராட்டி "தம்மம்" படத்தில் நடிக்க வைத்தார். அதன் பின்னர் கர்ணன் படத்தில் காட்டுப்பேச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

எனது முகம் அதில் பதிவு பண்ணவில்லை என்றாலும் என்னை பலரும் அறிய விரும்பினார்கள். தம்மம் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவும் என்னை வெகுவாக பாராட்டினார். படப்பிடிப்புக்கு முன் எனக்கு எந்த பயிற்சியும் கொடுக்கவில்லை. ரஞ்சித் பெரியப்பா படப்பிடிப்பின் போது இந்த மாதிரி சூழ்நிலையில் நீ எப்படி செயல்படுவாய் என்று கேட்டு அதனை அப்படியே செய்ய சொல்வார்.

Dhammam movie

அதைத்தான் நான் செய்தேன். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நான் தைரியமான பொண்ணு. அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். பள்ளிக்கு இன்றளவும் வரப்பு வழியாக தான் செல்வேன். யாரேனும் குறுக்க வந்து கீழே இறங்க சொன்னாலும் இறங்க மாட்டேன். புத்தரின் கொள்கை பற்றி எனக்கு முழுவதாக தெரியாது. வீட்டில் புத்தர் சிலை இருக்கும்.

எனது அப்பா ஜீவநாதன் பெரியப்பா ரஞ்சித் ஆகியோர் புத்தரை பின்தொடர்கிறார்கள். அதனால்தான் எனக்கு பூர்வதாரணி என்றும் பெயர் வைத்தனர். அம்பேத்கரே எங்களின் கடவுள். அவரின் புகைப்படம் என் வீட்டில் இருக்கு. அவரை மாதிரி சட்டம் பயின்று வழக்கறிஞராக மக்களுக்காக உழைக்க வேண்டும். அதுதான் எனது எதிர்கால லட்சியம்" என்று தெரிவித்தார்.