மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம கியூட்ல! மாமனாரின் பாட்டை பாடி, மனைவியிடம் ரொமான்ஸ் செய்த நடிகர் தனுஷ்! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது தமிழ், ஹிந்தி மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் செம பிஸியாக உள்ளார். இந்நிலையில் அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் கைவசம் கார்த்திக் நரேனுடன் ஒரு படம், செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மேன் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கத்தில் உருவாகும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்து எடுத்த சில புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வைரலானது.
Cutest Video 🤗😍 Thalaivar @dhanushkraja singing #ilamaithirumbuthey #Petta Song!@ash_r_dhanush 🤗♥️ #Karnan pic.twitter.com/CRBjmcseLF
— Dhanush Trends™ (@Dhanush_Trends) May 3, 2021
இந்நிலையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் இடம்பெற்ற இளமை திரும்புதே என்ற பாடலை பாடிக்கொண்டு தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் செம கியூட் என புகழ்ந்து வருகின்றனர்.