மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எங்களுக்குள் அது நடக்காமலே இருந்திருக்கலாம்.. ரட்சிதா குறித்து தினேஷ்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவி ரட்சிதாவை பிரிந்தது ஏன் என்பது தொடர்பாக பேசியுள்ளார்.
அதாவது, என்னுடைய திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய தடை ஏற்பட்டது. நானும், என்னுடைய மனைவியும் ஒரு சிறிய அளவிலான சண்டை போட்டு அதன் காரணமாக, ஏற்பட்ட ஈகோ பெரிதானதால், அதனை பெரியவர்களால் தீர்த்து வைக்க இயலாமல் போய்விட்டது. அதன் காரணமாகவே பிரிவு உண்டானது. தற்போது வரையில் பிரிந்து தான் வாழ்கிறோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அந்த நிகழ்விலிருந்து இன்று வரையில் மீண்டு வர முடியாமலிருக்கிறேன். அந்த பிரிவுக்குப் பின்னர் ஒரு வருட காலமாக என்னை நானே தனிமை படுத்திக் கொண்டிருக்கிறேன. தன்னுடைய மனைவியை குறிப்பிட்டு அவங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். அதையெல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பலமுறை அவருடன் சேர முயற்சி செய்தேன் ஆனாலும் அதில் பலனில்லை. தற்போது எனக்கு வரும் வேலைகளை எடுத்து செய்து கொண்டிருக்கின்றேன். வாழ்க்கை எப்படி போகிறதோ அப்படியே போய்க் கொண்டிருக்கிறேன். நாங்கள் இருவருமே சினிமா துறையை சார்ந்தவர்கள் என்பதால் எனக்கு அவர் அடையாளம், அவருக்கு நான் அடையாளம் என இருந்தது. ஆனால் அதுவே தற்போது உடைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவு இன்னும் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நினைக்கின்றேன் என தினேஷ் உருக்கமாக பேசியிருக்கிறார்.