மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கும்கி-2 படத்திற்காக 6 மாதங்களாக மலையேறும் நடிகை
பட்டதாரி படத்தின் மூலம் தமிழசினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதிமேனன்.
ஆனால் இவர் நடிக்க ஆரம்பித்த முதல் படம் நெடுநல்வாடை. இந்த முதல் படத்திலேயே இவருக்கும் இயக்குனர் செல்வகண்ணனுக்கும் ஏற்பட்ட தகராறில் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது.
அதையடுத்து, ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கி வந்த சந்தனத்தேவன் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படமும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இப்படி பல ராசிகளுக்கு சொந்தக்காரரான நடிகை அதிதிமேனன் தற்போது, அட்டகத்தி தினேசுடன் களவாணி மாப்பிள்ளை, பிரபுசாலமன் இயக்கி வரும் கும்கி-2 படங்களில் நடிக்கிறார்.
கும்கி-2 படத்தினை கும்கி படத்தை இயக்கிய பிரபுசாலமன் இந்த படத்தையும் இயங்கி வருகிறார். இந்த படத்தில் லெட்சுமி மேனனுக்கு பதில் அதிதிமேனன் கதாநாயகியை நடித்து வருகிறார்.
கும்கி-2 படத்தில் யானையுடன் நடிக்க வேண்டும், மலையேறும் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதால் 6 மாதங்களாக அதிதிமேனனுக்கு பயிற்சி கொடுத்துள்ளார் பிரபுசாலமன். கும்கி 2 படத்திற்காக வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார் அதிதி.