மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணமகனுக்கு அனுப்பப்பட்ட மணமகளின் ஆபாச புகைப்படம்.. டிரைவரின் காமச் செயலால் நின்ற திருமணம்.!
கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதே கம்பெனியில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வித்யாதரன் (33) என்பவர் டிரைவராக வேலை செய்து வந்தார். இருவரும் நட்பாகப் பழகிய நிலையில், அப்பெண்ணுக்கு திருமணம் நிச்சயமானது. மறுநாளே மணமகளின் ஆபாசப் புகைப்படங்கள் மணமகனின் எண்ணிற்கு வந்தது.
இதனால் அத்திருமணம் நின்று போனதையடுத்து, திருமணம் நின்ற காரணம் தெரியாமல், அப்பெண் சென்னையிலேயே வேலையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையில் வித்யாதரன் அப்பெண்ணிடம், "நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்." என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்,"நான் நட்பாகத் தான் பழகினேன்" என்று கூறியுள்ளார்.
உடனே வித்யாதரன்," உனது புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்து மணமகனுக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்தியது நான் தான் " என்று கோபமாக கூறியுள்ளார். இதையடுத்து சூலூருக்கே சென்றுவிட்ட அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. அப்போது வித்யாதரன் அப்பெண்ணின் வீட்டில் வந்து பிரச்சனை செய்துள்ளார். மேலும் அவரது போனில் ஆபாசமாக எடிட் செய்த அப்பெண்ணின் புகைப்படங்கள் உள்ளன.
திரும்பவும் மணமகனுக்கு அந்த போட்டோக்களை அனுப்பி மீண்டும் திருமணத்தை நிறுத்திவிட்டார். இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, வித்யாதரனை கைது செய்தனர். விசாரித்ததில் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்செய்தி சூலூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.