மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் டிவி மேடையில் கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை! உருக்கமான வீடியோ
மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றது. மேலும், விஜய் தொலைக்காட்சியும் மக்களை ஈர்ப்பதற்காக நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவருகிறது.
அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓன்று கலக்கப்போவது யாரு. சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போன்ற நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு குடுத்த நிகழ்ச்சிதான் கலக்கப்போவது யாரு. தற்போது இதன் சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது.
இதனை ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி தொகுத்து வழங்க பிரபல நடிகை ராதா மற்றும் நடிகை கோவை சரளா நடுவர்களாக பங்கேற்கின்றனர். இந்நிலையில் வரும் வாரம் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகை ராதா கண்ணீர் விட்டு அழுவது போல காட்டப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ராணுவ வீரர்களைப் பற்றிய வீடியோ ஒன்று அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடுவதாலும், அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்களைப் பற்றி பேசும் நடிகை ராதா கண்கலங்குவதுமாக தோன்றுகிறது.