அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
அடப்பாவமே... கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவனுக்கு தர்ம அடி.!! மனைவி, மாமியார் கைது.!!
கள்ளக்குறிச்சி அருகே கள்ளத்தொடர்பை தட்டி கேட்டதால் கணவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொழுவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. 30 வயதான பிரபுவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு வெளிநாட்டில் வேலை செய்வதால் மிகவும் அரிதாகவே சொந்த ஊருக்கு வந்து சென்றிருக்கிறார்.
கள்ளக்காதல்
இந்நிலையில் அவரது மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்தக் கள்ளக்காதலை பற்றிய செய்திகள் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பிரபுவுக்கு தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: தஞ்சையில் கொடூரம்... விபரீதத்தில் முடிந்த தகாத உறவு.!! தாயின் கள்ளக்காதலனை அடித்தே கொன்ற மகன்கள்.!!
கணவருக்கு கொலை மிரட்டல்
இதனைத் தொடர்ந்து ஊர் திரும்பிய பிரபு கள்ளக்காதல் தொடர்பாக தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அவரது மனைவி தனது தாய் தந்தை மற்றும் சகோதரருடன் சேர்ந்து பிரபுவை கடுமையாக தாக்கியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரபுவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரபுவின் மனைவி சுகந்தி மற்றும் அவரது மாமியார் சுமதி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சுகந்தியின் தந்தை மற்றும் சகோதரனை தேடி வருகிறது. கள்ளத்தொடர்பை தட்டி கேட்டதற்காக கணவன் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அடப்பாவமே... 5 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை.!! விசாரணையில் வெளிவந்த உண்மை.!!