ரஜினியின் கூலி படத்திற்கு வேட்டு.! தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.! ஷாக்கில் ரசிகர்கள்



ilayaraja-send-notice-to-sun-pictures

வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் கூலி. ரஜினியின் 171வது படமான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் 1983ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ பாடலின்  இசை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த இசையை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

Ilayaraja

அதில், "வா வா பக்கம் வா" பாடலின் அனைத்து விதமான உரிமையும் இளையராஜாவிடமே உள்ளது. அந்த இசையை பயன்படுத்த உரிய அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் டீசரில் இருந்து அந்த இசையை நீக்கி விட வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில்,  சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.