மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#தலைவர்171: "மீண்டும் இணைகிறதா தளபதி ஜோடி."? லோகேஷ் போடும் மாஸ் பிளான்.!! வெளியான புதிய அப்டேட்.!!
தமிழ் சினிமாவின் முடி சூடா மண்ணாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் லால் சலாம் வேட்டையன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அவரது மகள் நடிப்பில் உருவான லால் சலாம் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரின் 171 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்க இருக்கிறது.
தலைவர் 171 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 80-கள் மற்றும் 90-களில் உள்ள ரஜினியின் லுக்கில் அந்தப் போஸ்டர் வெளியாகி இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து அதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது .
இந்நிலையில் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஷோபனா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1991 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தளபதி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 33 ஆண்டுகளுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த ஜோடியை களம் இறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.