மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்பதை நிரூபித்த ரஜினி.. ஜெயிலர் படத்தின் வசூல் நிலவரம்.!
தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் ரூ.95 கோடியும், 2ம் நாளில் ரூ.56 கோடி என மொத்தமாக 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.