மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று முதல் திரையரங்குகளில் 'கில்லி'.! இந்த படத்திற்கு இப்படி ஒரு வரலாறா.?! முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?!
தளபதி விஜய் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படமாக இதுவரை இருப்பது கடந்த 2004 இல் வெளியாகிய கில்லி திரைப்படம் தான். இந்த படம் வெளியாகி 20 வருடம் ஆகிவிட்டது. ஆனாலும், இன்னும் அதற்கான எனர்ஜி மக்கள் மத்தியில் இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் ஹீரோவாக விஜய் நடிக்க, ஹீரோயினாக திரிஷா நடிக்க வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்த ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த கதையாக வெளியான திரைப்படம் தான் கில்லி. இன்றளவும் இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இது சுவாரசியமான படமாகும்.
இதற்கு முன்பு வரை காதல் படங்களில் மட்டும் நடித்து வந்த விஜய் ஆக்சன் ஹீரோவாக மாறிய ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்றும் இதை கூறலாம். படம் மட்டுமல்லாமல் இதன் பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அவரது, 'செல்லம்' என்ற டயலாக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் கில்லி திரைப்படம். ஆனால் அந்தத் திரைப்படத்தை விட கில்லி திரைப்படம் தான் இரண்டு மடங்கு வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர், நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. முதலில் இந்த படத்தின் கதையை இயக்குனர் தரணி விக்ரமிடம் தான் சொன்னாராம். மேலும், விக்ரமுக்கு ஜோடியாக ஜோதிகாவை தான் இதில் நடிக்க வைக்க அவர் திட்டமிட்டாராம். ஆனால் இவர்கள் இருவரையும் அனுகிய போது அவர்கள் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டானராம். அதன்பின் தான் இந்த படம் விஜய்க்கு சென்றுள்ளது, அதில் திரிஷாவும் நடித்துள்ளார்.