மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணகி படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு: 4 பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்திற்கான அடித்தளம் இதோ.!
4 பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இயக்குனர் யஷ்வந்த் கிஷோரால் எடுக்கப்பட்ட திரைப்படம் கண்ணகி. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல், டிரைலர் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. படம் வரும் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.
இதுகுறித்து படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "படத்தின் முதற்பார்வையை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அவர் கண்ணகி படத்தின் டிரைலரை பார்த்து, எங்களை பாராட்டிய திருமணம் மறக்க இயலாதது. வாழ்நாட்களில் அவரை பார்த்து வளர்ந்த நமக்கு, அவரின் பாராட்டுதல் என்றும் மறக்க இயலாதது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இரண்டு நிமிடம் கொண்ட காட்சிகளும் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன.