அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
கிழக்கே போகும் ரயில் பட நடிகர் சுதாகரா இவர்.! வைரலாகும் புகைப்படம்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் பாரதிராஜா. இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கிழக்கே போகும் ரயில்'. இப்படத்தின் கதாநாயகனாக முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சுதாகர். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
மேலும் இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அடுத்தடுத்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் சுதாகர். இப்படத்திற்கு பின்பு நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், சுவரில்லாத சித்திரங்கள் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
ஆனால் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு இவரின் படங்கள் தோல்வியை அடைந்து வந்ததால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. இதனை தொடர்ந்து தெலுங்கில் காமெடி நடிகராக சில திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
இது போன்ற நிலையில் நடிகர் சுதாகரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 80 வயதாகும் நடிகர் சுதாகரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'அதிசய பிறவி' திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் இறுதியாக சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.