திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட. சூப்பர்! சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் 18 வயது பிரபல நடிகை! யார் தெரியுமா?? தீயாய் பரவும் தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது 21வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் சாய்பல்லவி ஹீரோயினாக நடிக்கிறாராம். அப்படம் முடிந்ததும் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் 18வயது பிரபல நடிகை க்ரீத்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அவர் தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
பின் லிங்குசாமி இயக்கத்தில் உருவாக்கியுள்ள தி வாரியர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து க்ரீத்தி ஷெட்டி பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 41வது படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.