வல்லான் திரைப்படத்துக்கு யுஏ சான்றிதழ்; தணிக்கைக்குழு அறிவிப்பு.!
திடீரென விலகிய நடிகை குஷ்பூ! அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை குஷ்பூ. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார்.
நடிகை குஷ்பூ ரஜினி, கமல்,பிரபு,சத்யராஜ் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும் வெள்ளித்திரையில் அசத்தி வந்த குஷ்பூவின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பிய நிலையில் அவர் ஏராளமான தொடர்களில் நடித்தார்.
மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பு தற்போது எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், ட்விட்டர் பக்கங்களில் எதிர்மறையான விஷயங்களே நிறைய உள்ளது.
இதனால் நான் இயல்பாக இல்லை. மேலும் ட்விட்டர் கணக்கில் இருந்து நான் விலக எந்த ஒரு தனிப்பட்ட காரணமும் இல்லை. நான் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட எண்ணுகிறேன்.நிம்மதியாக வாழ விரும்புகிறேன் என்று விளக்கமளித்துள்ளார்.