ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
லட்சுமி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளியாகும் படம்.. இசையமைப்பாளர் யார் தெரியுமா??.. அசத்தல் அறிவிப்பு..!
இளையராஜா தனது படத்திற்கு இசையமைப்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான "பிரிவோம் சந்திப்போம்" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து பாஸ் என்ற பாஸ்கரன், நான் மகான் அல்ல, யுத்தம் செய் உட்பட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "ஆரோகணம்" படத்தின் மூலமாக இவர் இயக்குனராக மாறினார். இப்படத்திற்கு பின் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் இவர் இயக்கத்தில் வெளியான "ஹவுஸ் ஓனர்" திரைப்படம் விமர்சனம் ரீதியாக அமோக பாராட்டை பெற்று மத்திய அரசின் பனோரமா விருதையும் பெற்றது.
இந்த நிலையில் சமுத்திரக்கனி, மிஸ்கின், அபிராமி, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"தான் இயக்கியுள்ள படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருப்பதாகவும், மேஸ்ட்ரோ இளையராஜா எனது படத்திற்கு இசையமைப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். அது நல்ல அனுபவமாக இருக்கும். இந்த படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகள் நடப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனை பொறுத்தவரை அவர் தமிழக மக்களிடையே திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாக அவர் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.
அவர் இயக்கிய திரைப்படங்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்ற நிலையில், இந்த படம் அவருக்கு பெரும் வெற்றியாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.