திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
லியோ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி.. ஆனால், இவர்களுக்கு நஷ்டம்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வகையில் நியூ திரைப்படம் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து லியோ படத்தின் வெற்றி விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் வழக்கம் போல் குட்டி கதை கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லியோ படத்தின் இணை இயக்குனர் ரத்ன குமாரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வசூலின் மூலம் விநியோகஸ்தர்களுக்கு பங்காக 100 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பல திரையரங்குகளில் விநியோகஸ்தர்கள் பங்காக 80 சதவீதம் வாங்கியதால் இவ்வளவு பெரிய தொகை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் லியோ படத்தை திரையிட்ட திரையரங்குகளுக்கு அந்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.