மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எடுக்குறது போதைப்பொருள் கடத்துற படம், இதுல சால்ஜாப்பு வேற" - விஜயின் பேச்சை கலாய்க்கும் புளூ சட்டை மாறன்.!
லியோ திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நடிகர் விஜய், "மக்களுக்கு நல்லது, கெட்டது தெரியும். சினிமாவில் நல்லதையும், கெட்டதையும் பிரித்து காட்சிகள் வைப்பது இயல்பு. மாணவர் பள்ளி-கல்லூரிக்கு செல்கிறார் என்றால் வழியில் பல கடைகள் இருக்கும்.
அனைத்து கடைக்கும் சென்றுவிட்டு பள்ளிக்கு போவதில்லை. எதிர்காலத்தில் நம்ம பசங்க பண்ணிருக்காங்க என்ற பெயரை உங்களுடன் சேர்ந்து நானும் எடுக்க விரும்புகிறேன்" என பேசினார்.
முன்னதாக படத்தில் உள்ள நான் ரெடிதான் பாடலில் இருந்த சில சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்ட நிலையில், அதற்கான விளக்கத்தை நடிகர் விஜய் மேடையில் மேற்கூறியவாறு பேசியிருந்தார்.
இந்த கெட்டதை எல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கலாம்.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 2, 2023
சீட் மேல் ஏறிகுதித்து தியேட்டரை நாசம் செய்தல், கட் அவுட் பாலாபிஷேகம், சோஷியல் மீடியாவில் ஆபாசமாக பேசி, எழுதி வாந்தி எடுப்பது, ஸ்கூல் - காலேஜ் - வேலைக்கு கட் அடித்துவிட்டு FDFS பார்ப்பது, பெற்றோரின் பணத்தில் 2,000 ரூபாய்,… pic.twitter.com/gZ9qyuYrqO
இந்நிலையில், இதனை தனது பாணியில் விமர்சித்துள்ள நீலச்சட்டை மாறன், "இந்த கெட்டதை எல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கலாம். சீட் மேல் ஏறிகுதித்து தியேட்டரை நாசம் செய்தல், கட் அவுட் பாலாபிஷேகம், சோஷியல் மீடியாவில் ஆபாசமாக பேசி, எழுதி வாந்தி எடுப்பது, ஸ்கூல் - காலேஜ் - வேலைக்கு கட் அடித்துவிட்டு FDFS பார்ப்பது,
பெற்றோரின் பணத்தில் 2,000 ரூபாய், 5,000 ரூபாய் என ப்ளாக் டிக்கட் வாங்குவது, பொதுமக்களை படம் பார்க்க விடாமல் ஊளையிடுவது, ஓடாத படத்தை ப்ளாக்பஸ்டர் என்று காமடி செய்வது. ஆனா இப்படியெல்லாம் காமடி செய்யாதீங்கன்னு இவர் சொல்ல மாட்டார். அதுக்கு காரணம் எல்லாருக்கும் தெரியும்.
பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல. மாணவிகள் கூட சாராயம் குடிக்கும் செய்தி மற்றும் வீடியோ வந்துள்ளது. பள்ளி, கல்லூரி அருகேயுள்ள பெட்டிக்கடைகளில் மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கும் செய்திகளும் வந்துள்ளது. இதுபற்றி எதுவுமே தெரியாமல் பேச வேண்டியது. எடுக்கறது போதைக்கடத்தல் படம். அதுக்கு இப்படி ஒரு சால்ஜாப்பு வேற" என தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல. மாணவிகள் கூட சாராயம் குடிக்கும் செய்தி மற்றும் வீடியோ வந்துள்ளது. பள்ளி, கல்லூரி அருகேயுள்ள பெட்டிக்கடைகளில் மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கும் செய்திகளும் வந்துள்ளது.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 2, 2023
இதுபற்றி எதுவுமே தெரியாமல் பேச வேண்டியது. எடுக்கறது போதைக்கடத்தல் படம். அதுக்கு… pic.twitter.com/eBMO9O5SiL