திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தலைவர் 171 வது படத்தின் அப்டேட்.! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன சூப்பர் தகவல்.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து அவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோ.
விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் அடுத்ததாக தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார் . இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் தலைவர் 171 படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், லோகேஷ், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகிருக்கும் அவள் பெயர் ரஜினி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், தலைவர் 171 வது படத்திற்கான கதையை அடுத்த வாரம் முதல் எழுத தொடங்குகிறேன். லியோ பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. மேலும் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என கூறியுள்ளார்.