மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தலைவருடன் இணைந்ததில் மகிழ்ச்சி..." லோகேஷ் பகிர்ந்து கொண்ட உற்சாகமான ட்வீட்.!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் தற்போது தளபதி விஜய் வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 675 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்க இருக்கிறார்..
அதன் பிறகு சூப்பர் ஸ்டாரின் 171 வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியானது. அந்த அறிவிப்பின்படி ரஜினியின் 171 வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்க உள்ளார். விக்ரம் திரைப்படத்தில் ஆக்சன் இயக்குனராக பணியாற்றிய அன்பறிவு இந்தத் திரைப்படத்திலும் ஸ்டண்ட் இயக்குனராகப் பணியாற்றுகிறார். இந்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Excited to be joining hands with Thalaivar @rajinikanth Sir for #Thalaivar171 with @sunpictures
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 11, 2023
An @anirudhofficial Musical
An @anbariv stunt https://t.co/ISP10GqyxY
இந்நிலையில் சூப்பர் ஸ்டாருடன் 171 வது திரைப்படத்தில் இணைவது பற்றி ட்வீட் செய்திருக்கும் லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ் அனிருத் மற்றும் அன்பறிவு ஆகியோர் டேக் செய்து தலைவருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என பதிவிட்டு இருக்கிறார். இவரது இயக்கத்தில் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த புதிய அறிவிப்பாள் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.