மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தர்ஷனுடன் நெருக்கமான படுக்கையறை காட்சி சர்ச்சைகள்!! பொசுக்குனு லாஸ்லியா என்ன சொல்லிட்டார்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே இவருக்கென பெரும் ஆர்மி உருவானது.
மேலும் லாஸ்லியா, கவின், முகேன் தர்ஷன், சாண்டி ஆகியோருடன் இணைந்து செய்த சேட்டைகள் அனைவராலும் பெருமளவில் ரசிக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. அவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோருக்கிடையே படுக்கையறை காட்சிகள் உள்ளிட்ட நெருக்கமான சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்ட சிலர் பிக்பாஸ் வீட்டில் அண்ணன் தங்கையாக பழகிய நிலையில், எப்படி இதுபோன்ற காட்சிகளில் நடித்தீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் இதனால் சில சர்ச்சைகளும் எழுந்தது.
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லாஸ்லியா சமீபத்தில் பேட்டி ஒன்றில், படத்தில் வரும் ரொமான்டிக் காட்சிகள் வெறும் நடிப்புதான். நிஜ வாழ்க்கையில் அதனை ஒப்பிட வேண்டாம். அதனை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தர்ஷன் எனக்கு அண்ணன் மாதிரி. நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே செம ஜாலியாக அந்த காட்சிகளை எடுத்து முடித்தோம் என கூறியுள்ளார்.