மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேலையில் ரசிகர்களை சூடேற்றும் மடோனா செபாஸ்டியன்.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!?
மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மடோனா செபாஸ்டியன். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையானார். இந்தப் படத்திற்கு பின்பு தமிழில் காதலும் கடந்து போகும், கவண் என்ற இரு திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.
இந்தப் படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் மடோனாவின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படத்திற்குப் பின்பு தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சினிமாக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் மடோனா செபாஸ்டியன். இவர் திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் கவர்ச்சியாக புகைப்படம் பதிவிட்டு தனது 37 லட்சம் பாலோயர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷேர் செய்து மடோனாவை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.