மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருப்பு பேரழகியாக மாறிய மடோனா செபாஸ்டியன்.. வைரலாகும் அட்டகாசமான புகைபடங்கள்.!
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் மடோனா செபாஷ்டியன். இவர் தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
முதன் முதலில் மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பிரேமம்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. இந்தப் படத்திற்கு பின்பு தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'காதலும் கடந்து போகும்' திரைப்படத்தின் மூலமாக காலடியெடுத்து வைத்தார்.
இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் மடோனா மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படத்திற்கு பின்பு கவன், பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இப்படம் இவருக்கு பெயர் பெற்று தரவில்லை என்பதால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மடோனா.
இவ்வாறு சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருக்கும்போதே மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட்கள் செய்து அதனை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் கருப்பு நிற உடையில் போட்டோ சூட் செய்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது