மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த விஷயம் என் அம்மாவுக்கு மட்டுமே தெரியும்? ஓப்பனாக பேசிய மடோனா செபாஸ்டின்.!
மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். அனைவரும் தொடர்ந்து இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். ஆனால் படக்குழு இதனை எந்த ஒரு அப்டேட்டிலும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, லியோ படத்தில் நடித்தது என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது. கடைசிவரை நான் லியோவில் நடித்த கதாபாத்திரத்தை யாரிடமும் கூறவில்லை. இந்த படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தனக்கு சண்டை பயிற்சி அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.