அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
அடஅட.. ஹிட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட மைனா நந்தினி! அதுவும் கூட யார்னு பார்த்தீங்களா!! கலக்கல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நந்தினி. அதனை தொடர்ந்து அவர் ஏராளமான தொடர்களிலும், வெள்ளிதிரையில் சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகை நந்தினி சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
நந்தினி மற்றும் யோகேஷ் இருவரும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மைனா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நந்தினி தற்போது வேலைக்காரன் தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஷூட்டில் ஸ்பாட்டில் தன்னுடன் சீரியலில் நடிக்கும் நடிகர் சத்யாவுடன் ஜாலியாக குத்தாட்டம் போட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. நடிகர் சத்யா பிரபல பாடகியும், பிக்பாஸ் பிரபலமுமான ரம்யாவின் கணவர் ஆவார்.