தோனியை பார்த்தல் உடனே அதை கூறிவிடுவேன்! பிரபல நடிகை கூறிய பளீர் பதில்!



Mega akash talks about vijay ajith andh dhoni

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். ஆனால் ஒருசில காரணங்களால் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் இன்றுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படம்தான் இவருக்கு தமிழில் வெளியான முதல் படம் என்றே கூறலாம். பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சிம்பு நடிப்பில் வளியான வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்திலும், அதர்வாவுக்கு ஜோடியாக பூமராங் படத்திலும் நடித்துள்ளார்.

Meha akash

இந்நிலையில் பல்வேறு பிரபலங்கள் பற்றி மேகா அகாஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, விஜய், அஜித், தோனி பற்றி சுவாரசியமான பதில்களை கூறினார் மேகா ஆகாஷ். அதாவது அஜித்தை நேரில் பார்த்தால் 'எப்படி இவ்ளோ ஹண்ட்ஸமாக இருக்கிறீர்கள்?' என கேட்பேன்.

விஜய்யை நேரில் பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லி கொடுங்கள் என கேட்பேன். தல தோனியை நேரில் பார்த்தால் 'ஐ லவ் யூ' என்று உடனே கூறிவிடுவேன்" என மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார்.