மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மெட்டி ஒலி புகழ் நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சோகம்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்ற நெடுந்தொடர் மெட்டிஒலி. இந்த நெடுந்தொடரில் நடித்திருந்த நடிகை காவேரி. இவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போயிருக்கிறார்.
இதற்கான காரணம் தொடர்பாக அவர் கூறுகையில், "நான் திடீரென தைராய்டு பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டேன். அதற்காக மருந்து எடுத்தபோது உடல் எடை வெகுவாக அதிகரித்தது.
என் உடல் எடை அதிகரித்து விட்டது என மாத்திரையை நிறுத்திய போது, உடல் எடை கணிசமாக குறைந்தது. அதிலிருந்து தற்போது வரை பலவகையான உணவுகளை எடுத்துக்கொண்டு உடலை பராமரித்த போதிலும் உடல் எடை ஏறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது நடிகை இருந்த உடல்வாகுக்கும், தற்போதுள்ள தோற்றத்திற்கும் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டதாக மெட்டி ஒலி தொடரின் பல ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.