"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
குழந்தையுடன் கிணற்றுக்குள் விழுந்த தாய்! காப்பாற்ற பாய்ந்த பாட்டி! பின் நடந்தது என்ன? பகீர் சம்பவம்!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பால்மடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவருக்கு சக்திகுமார் என்பவருடன் கடந்த 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 7 வயதில் ஜீவன்யா என்ற பெண் குழந்தையும், 2 வயதில் சுதர்சன் என்ற ஆண்குழந்தையும் உள்ளது. ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சக்திகுமார் கொரோனா காலத்தில் வேலையை இழந்தார்.
அதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கார்த்திகா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவர்கள் வறுமையில் கஷ்டபட்டதால் கார்த்திகா தனக்கு திருமணத்திற்கு போட்ட 21 பவுன் நகையை திருப்பித் தருமாறு மாமனாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதனை தர அவர் மறுத்துள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மனமுடைந்த கார்த்திகா தனது கணவர் விழுந்து தற்கொலை செய்துகொண்ட அதே கிணற்றில் 2 வயது மகனுடன் குதித்துள்ளார். இதனைக் கண்ட கார்த்திகாவின் தாயார் சரஸ்வதி அடுத்த கணமே தனது மகளையும், பேரனையும் காப்பாற்ற எண்ணி கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால் உள்ளே படிகள் இல்லாததால் கிணற்றுக்குள் இருந்த மோட்டார் கயிற்றை பிடித்துக்கொண்டு அவர்கள் இருந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த. அவர்கள் கிணற்றுக்குள் தத்தளித்த அவர்களை எந்த பாதிப்புமின்றி மீட்டு காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.