மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னவொரு ரொமான்ஸ் லுக்கு! காதலருடன் நெருக்கமாக நயன்தாரா! வயிறெரியும் இளசுகள்!!
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென நடிகர்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மேலும் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஒன்றாக புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.
A Bliss Day #Easter2021 #VickyNayan pic.twitter.com/Y9zYjMlRjO
— Nayanthara✨ (@NayantharaU) April 5, 2021
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அண்மையில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஈஸ்டர் தினத்தை கொண்டாடினார். அப்பொழுது அவருடன் நெருக்கமாக ரொமான்ஸாக புகைப்படம் எடுத்துள்ளார். அதனை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.