அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
ஷாக்கிங்... புது மாப்பிள்ளை மர்ம மரணம்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!
காதலித்த பெண்ணை திருமணம் செய்த இரண்டு நாளில் புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சொர்க்கம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், இவரது மகன் அஜித். தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். உதகையைச் சேர்ந்த ஜான்சன் என்பவரது மகள் ராதிகா. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அஜித் மற்றும் ராதிகா இருவரும் நட்பாக பழகத் தொடங்கி நாளடைவில் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர்.
தந்தை சம்மதத்துடன் திருமணம்
இந்நிலையில் அஜித் தனது காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து தந்தைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின்னர் அஜித் மற்றும் ராதிகாவின் திருமணத்தை அவர்களது குலதெய்வ கோவிலில் தமிழரசன் நடத்தி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜூலை 5ஆம் தேதி பதிவு திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடுமை... 15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்.!!
மர்ம மரணம்
இதனைத் தொடர்ந்து பதிவு திருமணம் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பிய அஜித் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அவரது தந்தை ஆரணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தீவிரமாக அஜித்தை தேடத் தொடங்கினர். இந்நிலையில் அத்திமூரை என்ற இடத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் இறந்த சடலம் மரத்தில் தொங்குவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் இறந்த வாலிபர் அஜித் என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன 2 நாளில் புது மாப்பிள்ளையின் மர்ம மரணம் அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியும் சோகமும் அடையச் செய்திருக்கிறது. ஏதேனும் பிரச்சினை காரணமாக அஜித் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது மரணத்தில் ஏதேனும் கர்ப்பம் உள்ளதா என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் போதை ஆசாமி கும்பலால் யூடியூபருக்கு நேர்ந்த சம்பவம்; அதிரவைக்கும் வீடியோ வைரல்.!