#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஓடிடியில் வெளியாகிறதா?? வெளிவந்த தகவல்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத்தால் திரையரங்குகள் மூடப்பட்டு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரிலீசுக்கு தயாராக இருந்த சில படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது.
அதனைத் தொடர்ந்து திரையரங்குகள் திறப்பது குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் சில படங்கள் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி வருகிறது. மேலும் பொன்மகள் வந்தாள், பென்குயின், டேனி, மற்றும் லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வெளியானது.
அதனை தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.