மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிக்சன் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா!! அட.. இந்தப் பெண் போட்டியாளருமா?? வைரல் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்தவர் நிக்சன். இசை கலைஞரான அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்த துவக்கத்தில் சிறப்பாக விளையாடினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பெண் போட்டியாளர் ஐஷூவுடன் பழகி தனது ரூட்டில் இருந்து மாறினார். பின்னர் வினுஷாவை உருவ கேலி செய்து விமர்சனத்திற்கு ஆளானார். இவ்வாறு 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிக்சன் கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட்டான அவர் ஏற்கனவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எலிமினேட்டான போட்டியாளர்கள் சரவண விக்ரம் மற்றும் ஜோவிகா ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார். மூவரும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் மூவரும் அவுட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.