அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
திருச்சியில் துயரம்... மதுவால் வந்த விரக்தி.!! கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்த முதியவர்.!!
திருச்சி அருகே மது அருந்தாத விரக்தியில் முதியவர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவிற்கு அடிமையான புருஷோத்தமன்
திருச்சி அல்லித்துறை பெரியநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 65 வயதான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்ததால் குடும்பத்தினர் இவரை மது மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
விரக்தியில் தற்கொலை
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த காலத்தில் புருஷோத்தமன் ஒரு மாத காலமாக மது அருந்தாமல் இருந்திருக்கிறார். இதனால் அவர் உச்சகட்ட விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மது அருந்த முடியவில்லை என்ற ஏக்கத்தில் வீட்டில் யாரும் இல்லாத போது கத்திரிக்கோலால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலை செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: தஞ்சையில் கொடூரம்... விபரீதத்தில் முடிந்த தகாத உறவு.!! தாயின் கள்ளக்காதலனை அடித்தே கொன்ற மகன்கள்.!!
போலீஸ் விசாரணை
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தற்கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட புருஷோத்தமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுவிற்கு அடிமையான முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அடப்பாவமே... 5 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை.!! விசாரணையில் வெளிவந்த உண்மை.!!