அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
மளிகைக்கடைக்குள் வெடித்துச் சிதறிய பிரிட்ஜ்; இருவர் படுகாயம்., கடலூரில் பகீர்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர் தனது வீட்டின் முன்புறம் மளிகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் சண்முகம் கடையை அடைத்துக்கொண்டு இருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த ரவி, இந்திரா ஆகியோர் பொருட்கள் வாங்க வந்துள்ளனர்.
இந்திரா பொருட்களை வாங்கிவிட்டு சிறிது தூரம் சென்றுவிட, திடீரென பிரிட்ஜ் வெடித்து சிதறி இருக்கிறது. இந்த சம்பவத்தில் கடை முழுவதும் சேதமடைந்தது.
இதையும் படிங்க: ஆசையாக விளையாடிய ஊஞ்சலில் காத்திருந்த எமன்; கழுத்து இறுகி சிறுமி பரிதாப பலி.!
இருவர் படுகாயம்
மேலும், ரவி, சண்முகம் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். விசரணையில், பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடித்து சிதறி இருக்கலாம் என கூறப்படுகிறது.
வெடி விபத்தைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சண்முகத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
கண்ணாடி சிதறிய காரணத்தால், கடைக்கு அருகில் இருந்த 6 மாடுகளும் காயம் அடைந்தன. இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. கணவன் - மனைவி பரிதாப பலி.!