மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணகி திரைப்படத்தை மனதார பாராட்டிய இயக்குனர் பா. ரஞ்சித்: என்ன சொன்னார் தெரியுமா?.!
கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் கண்ணகி. இப்படத்தை இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார்.
4 பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை கண்ட பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கண்ணகி திரைப்படம் தமிழ் திரையுலகத்திற்கு தேவையான முக்கியமான திரைப்படம்.
இந்த படத்திற்கு பின்னர் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக யஷ்வந்த் இருப்பார். பெண்களின் வாழ்க்கையை ஆணின் பார்வையில் இருந்து சொல்வது சரியாக ஒரு இயக்குனராக அவர் கற்றுக் கொண்ட விஷயங்கள். சமூகத்தின் மீது தான் வைத்திருக்கும் அக்கறையை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
• @beemji: Director @Yechuofficial is a socially responsible director, and I can confidently say this with #Kannagi! The film offers a unique perspective on women from a man's point of view, making it one of the great films in Tamil cinema.#KannagiFromTomorrow
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) December 14, 2023
A @shaanrahman… pic.twitter.com/YdS2p4jo8N
இந்த படம் கட்டாயம் பெரிய அளவில் பேசப்படும். நல்ல விவாதத்தையும் உண்டாக்கும். பார்வையாளர்களுக்கும் இப்படம் பிடித்த திரைப்படமாக இருக்கும். அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தார்கள்" என்று கூறினார்.