#PandianStores: எம்பொண்ணு கழுத்துல நகை எங்கே?.. வில்லத்தனத்தில் வச்சி செய்யும் முல்லையின் அம்மா.. வைரல் ப்ரோமோ..!



Pandian Stores 27 Nov 2022 Promo

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் - தம்பிகளின் பாசபந்தத்தை மையக்கருவாக வைத்து ஒளிபரப்பு செய்யப்படும் தொடர், மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற தொடர் ஆகும். 

தற்போது, தங்களின் பூர்வீக வீட்டினை விற்பனை செய்துவிட்டு வந்த மூர்த்தியின் குடும்பத்தினர், கதிர் - முல்லை ஜோடி தங்கியிருந்த இல்லத்தில் இருக்கின்றனர். அண்ணன் - தம்பிகள் அனைவரும் பிரிந்து மீண்டும் சேர்ந்த உற்சாகத்தில் குடும்பமே இருக்கிறது. 

கதிர் - முல்லை ஜோடி சமையல் போட்டியில் ரூ.10 இலட்சம் வெற்றி பெற்றதை வைத்து மீனாவின் நகையை ரூ.5 இலட்சத்திற்கு மீட்டுக்கொடுக்க, மீதியுள்ள பணத்தை 2 குழந்தைகளுக்கு இரண்டரை இலட்சமாக பிரித்து கொடுக்கின்றனர். 

அனைவரும் முல்லையின் அம்மா வீட்டுக்கு சென்ற சமயத்தில் நகை அணிந்து இருக்க, முல்லையின் கழுத்தில் தாலிக்கயிறு மட்டும் இருந்துள்ளது. அவரின் நகையை மீட்க முன்னதாகவே மூர்த்தி - தனம் கூறியிருந்தபோது, அதனை முல்லை - கதிர் ஜோடி ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது. 

இந்த விஷயங்கள் எதையும் அறியாத முல்லையின் தாய், உங்களின் கழுத்தில் நகை இருக்கிறது. எனது மகளின் கழுத்தில் ஒன்றுமே இல்லை என்று கூறுகிறார். ஆதலால், இவ்வாரத்திற்கு வில்லத்தனம் செய்ய முல்லையின் தாய் இருப்பதால், தொடர் பரபரப்பாகியுள்ளது.