ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
சிம்பு நயன்தாரா ரசிகர்களே தயாரா.? எதிர்பார்ப்பை எகிறச்செய்த அறிவிப்பு.!

கிசுகிசுக்கள்
பிரபலமாக இருப்பவர்கள் நண்பர்களாகி திருமணம் செய்வதும் பின் விவாகரத்து செய்வதும் மிக வழக்கமான விஷயமாக இருந்து வருகிறது. அன்றாடம் ஏதாவது ஒரு கிசுகிசுக்களை நாம் செய்திகளில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படி பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு ஜோடி தான் நயன்தாரா மற்றும் சிம்பு.
வல்லவனில் காதல்
வல்லவன் திரைப்படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், பின்னர் பல்வேறு காரணங்களால் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்தனர். அதன் பின் மீண்டும் கடந்த 2016 இல் இது நம்ம ஆளு திரைப்படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர்.
இதையும் படிங்க: சிம்புவின் அடுத்த 3 படங்கள் என்ன? வெளியாகிறது முக்கிய அப்டேட்.. விபரம் உள்ளே.!
டிராகன் படம்
அதன் பிறகு இவர்களது காம்பினேஷனில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதும் இல்லை. தற்போது 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இருவரும் ஒன்றாக இணைய இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படத்தில் பிரதீப் ரெங்கநாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்ற இந்த திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார்.
9 வருடங்களுக்குப் பின்
வரும் பிப்ரவரி 21ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். 9 வருடங்களுக்குப் பின் இருவரும் சந்திக்கும் ஒரே நிகழ்ச்சி என்பதால் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிம்பு ரசிகர்களே ரெடியா.? STR பிறந்த நாளில்.. டபுள் கொண்டாட்டம்.. வெளியாகவுள்ள 2 காதல் காவியங்கள்.!