அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
வயிற்று வலியால் நடந்த சோகம்; அதிமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, விஜயபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 50). இவர் விஜயபுரம் அதிமுக கிளை கழக பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 3 மகன்கள் இருக்கின்றனர். இதனிடையே கண்ணனுக்கு தீராத வயிற்றுவலி பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக பல சிகிச்சை பெற்றும் சரிவரவில்லை என கூறப்படுகிறது.
வயிற்று வலியால் நடந்த சோகம்
இந்நிலையில், நேற்று வீட்டில் மனமுடைந்தவாறு காணப்பட்ட கண்ணன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? அதிமுகவுடன் கரம்கோர்க்கும் காங்கிரஸ்?.. முன்னாள் அமைச்சரின் பரபரப்பு ட்விட்.!
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பிளவுபடுகிறது அதிமுக? பாஜகவின் மாஸ்டர் பிளான் என்ன? - சட்டத்துறை அமைச்சரின் பகீர் தகவல்.!