மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நயன்தாராவிற்கு அப்பாவாகும் சீமான்.! விக்னேஷ் சிவனின் அதிரடி அறிவிப்பு..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எனும் பெயர் பெற்றுள்ளார். தமிழ் திரைதுறையில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியவர் நயன்தாரா.
தமிழில் முதன் முதலில் 'ஐயா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா, பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களத்தை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா இதன் பிறகும் திரைத்துறையில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல் ஐ சி' எனும் பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
மேலும் இப்படத்தில் கதாநாயகனாக 'லவ் டுடே' படத்தின் நடிகரான பிரதீப் ரங்கநாதனும், கீர்த்தி செட்டியும் நடிக்கவுள்ளனர். இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நடிக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்போது முன்னாள் இயக்குனரும் அரசியல்வாதியுமான சீமான் நயன்தாராவின் தந்தையாக நடிக்க உள்ளார் என்று விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார். இவ்வாறு திரைப்பட்டாளங்கள் சேர்ந்து நடிக்கவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகி வருகிறது.