ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சாமியே செஞ்ச தவமே.. செம க்யூட் புகைப்படங்களுடன் பிரசன்னா வெளியிட்ட கவிதை! யாருக்காக பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் அடுத்து பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. அவர் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் அனைவரும் பார்த்து வியக்கும் நட்சத்திர தம்பதிகளாக விளங்கி வருகின்றனர்.
இந்த ஜோடிக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் பிரசன்னாவின் மகள் ஆத்யந்தா அன்மையில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த நிலையில் பிரசன்னா தனது மகளுக்காக எழுதிய கவிதை ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் தனது மகளின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து பிரசன்னா,
தோளுல தவழுற தாயே!
என் தேனு முட்டாயே!
மார்கழி மாசத்து மழையே,
என் சிரிக்கும் மத்தாப்பே!
வீட்டுல வளருற நிலவே,
என் செல்ல பொன்வண்டே!
வெல்ல கட்டி முத்தமே,
என் உசுரு மொத்தமே!
சாமியே செஞ்ச தவமே!மகளே!
நீ வாழு நூறு யுகமே!! என வாழ்த்தியுள்ளார். அது வைரலாகி வருகிறது.