#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரசன்னா, சினேகா விவாகரத்தா.? உடைத்து பேசிய பிரசன்னா..
கோலிவுட் திரையுலகில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் பிரசன்னா, சினேகா தம்பதியினர். முன்னணி நடிகர்களாக நடித்த இவர்கள் நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்கள். 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற திரைப்படத்தின் கதாநாயகன் கதாநாயகியாக பிரசன்னா சினேகா நடித்த போது காதலிக்க தொடங்கினர்.
2012 ஆம் வருடம் பெற்றோர்கள் மற்றும் திரையுலகினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட பிரசன்னா, சினேகா தம்பதியர்களுக்கு விகான், ஆதித்யா என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடித்து வரும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்திருக்கிறார்கள். சமீபத்தில் பிரசன்னா, சினேகா விவாகரத்து செய்ய உள்ளதாக சமூக வலைத்தளத்தில் கிசுகிசுத்து வந்தனர்.
இதனையடுத்து தற்போது பிரசன்னா, சினேகா ஜோடிகளின் திருமண நாளையடுத்து பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா விற்கு வாழ்த்து பதிவை ஒன்று பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் திருமணநாள் வாழ்த்துக்கள் அன்பே, ஒவ்வொரு நொடியும் நாம் சிறப்பாக வாழ வேண்டும். உன்னை எப்போதும் காதலித்துக் கொண்டிருக்கிறேன். நம்மை சூழ்ந்த வதந்திகள் பொய்யாகட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.