மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரேமம் படம் நடிகை நிச்சயதார்த்தம் முடிந்ததா.? வெளியான புகைப்படத்தால் சோகத்தில் ரசிகர்கள்.!
தமிழில் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அனுப்புமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.
முதல் படமே இவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை. இதன் பிறகு தமிழில் சினிமா வாய்ப்பு குறைந்தது. தெலுங்கு சினிமாவில் தன் கவனத்தை செலுத்திய அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், தமிழில் அதர்வாவுடன் இணைந்து 'தள்ளி போகாதே' திரைப்படமும் நடித்திருந்தார். தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து 'சைரன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் அவருடைய விரலில் காகிதத்தாலான மோதிரத்தை அணிந்து கொண்டு தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று பதிவிட்டிருந்தார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர.