மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினியின் 171வது படத்தில் இணைந்த பான் இந்தியா ஸ்டார்.. வெளியான அசத்தல் தகவல்.!
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக 450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த தலைவர் 171வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு, வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது மற்றொரு பான் இந்தியா ஸ்டார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரபல மலையாள நடிகர் பிரித்திவிராஜ் சூப்பர் ஸ்டாரின் 171 வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.