மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணாடி போன்ற சேலை.! லோ ஹிப்..! இதெல்லாம் ஒரு விஷயமே இல்லையாம்..! நடிகை பிரியா பவானி ஷங்கர் பேசிய பேச்சில் வாயடைத்து போன ரசிகர்கள்.!
சமீபத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் பிரியா பவானி ஷங்கர். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக மீடியாவில் நுழைந்தார்.
பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் சின்னத்திரை தொடர்களில் தந்து நடிப்பு திறமையை காட்ட துவங்கினார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. முதலில் மேயாத மான் படத்தில் அறிமுகமானார்.
பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடித்தார். தற்போது கசட தபர, வான், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய வார்த்தைகள் இப்பொது வைரலாகி வருகின்றன.
அந்த பேட்டியில் பேசிய அவர், ” என்னுடைய வரம்பு என்ன என்று எனக்கு தெரியும். எனக்கு பொருத்தமான கதைகளில் மட்டுமே நான் நடிப்பேன். எந்த கதைக்கு எவ்வளவு கவர்ச்சி தேவை என்பது எனக்கு தெரியும். என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன். கவர்ச்சி பொம்மையாக வலம் வருவதில் எனக்கு விருப்பமில்லை. ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையை லோ ஹிப்பில் கட்டிக்கொண்டு இடுப்பு தெரியும் அளவுக்கு நடிப்பதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது” என்று கூறியுள்ளார்.