#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது காதலரை பிரிந்துவிட்டாரா பிரியா பவானி ஷங்கர்! ரசித்தபடி ஒத்த புகைப்படத்தால் அவரே அளித்த பதில்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு தாவிய அவர் மேயாத மான் திரைப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இந்தியன் 2 , மாபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற என படங்களிலும் நடித்து வந்தார். நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில், போன வருஷம் கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்னு நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார். மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அதிகம் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் அவரது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அறிந்த பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் போனில் இந்த செய்தியை பார்த்து சிரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, என்னை பற்றிய வதந்திகளை படிக்கும்போது இப்படித்தான் என்று பதிவிட்டு காதலரை பிரிந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.